TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்குக்கு வெளியே கொழும்புத் தேர்தல் மாவட்டம் உட்பட்ட மேல் மாகாணத்திலும் களமிறங்குவது குறித்துத் தீவிரமாக ஆராய்து வருகின்றது.
இது தொடர்பில் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் கூட்டத்தை மாவட்டக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் பம்பலபிட்டி அரசு தொடர்மாடிக் கட்டடத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இந்த கூட்டம் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணிவரை நடை பெற்றது.

கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளை உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்குபற்றி தேர்தலில் போட்டியிடுவதில் எதிர் நோக்கும் சாதக பாதகங்களைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கூட்டமைப்பு பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

கொழும்பு இலங்கைத் தமிழரசு கட்சி கொழும்பு மாவட்டத்தில் நிச்சயம் களமிறங்க வேண்டும் என்ற கருத்து அனைவராலும் முன் வைக்கப்பட்டது எனினும் கொழும்பிலிருந்து ஏற்கனவே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர் தரப்பை பாதிப்படையச் செய்து ஒட்டுமொத்த தமிழ் பிரதிநிதித்துவத்தையும் கெடுத்து விடாது என்ற கருத்தும் சில
உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.

ஏற்கனவே மனோ கணேசன் தரப்பு தமிழர்களைக் கொழும்பில் பிரதிநிதித்துவப் படுத்தி வருகின்றது. அவர்களும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனத்தவர்கள், இன்னொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துதுவதை மற்றுமொரு சிறுபான்மை இனத்தவர்களான வடக்கு கிழக்கு தமிழர்கள் முறியடித்து இல்லாமல்லாக்கினார்கள் என்ற அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்று அங்கு பேசிய இரா.சம்பந்தன் தொடர்ந்தும் தமது உரையில்,

நாங்கள் இன்றைக்கு மேல் மாகாணம் சம்பந்தமாக நமக்கிடையே சில கருத்துகளை பரிமாறிக் கொள்ளவேண்டியுள்ளது .அதை நாங்கள் செய்வதற்க்கு காரணம் என்னவென்றால் தமிழர்கள் அதிகம் கூடுதளக் வாழ்வது வடமாகனமாக இருந்தால்
அதற்கு பிறகு கிழக்கு மாகாணமாக இருந்தால் அதற்கு பிறகு தமிழர்கள் அதிகமாக வாழ்வது மேல் மகாணத்தில் இலங்கைதமிழர்கள் ஆனபடியால் மேல் மாகாணத்தில் நாங்கள் உள்ள நிலைமையை பரிசீலிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.

தேர்தல் போக்குகளிலும் காலத்திற்கு காலம் மாற்றம் ஏற்படுகின்றது; மேல் மாகாணத்தில் எமது எண்ணிக்னை பாராளுமன்றத்தில் எமது உறுப்புரிமையை அதிகரிக்கப்படக்கூடிய வழியில் பயன்படுத்தப்படலாமா இல்லையா என்பது ஒரு
முக்கியமான கேள்வி மேல் மாகாணத்தில் நாங்கள் ஒரு ஆசனத்தைப் பெற்றால் தெரிவின் மூலமாக போட்டியின் மூலமாக எமது மொத்த உறுப்புரிமையை அதிகரிப்பதற்கு மேல் மாகாணத்தில் எமக்க விழக்கூடிய வாக்குக்கள் எமது தேசியப்பட்டியல் வாக்குரிமையை அதிகரிக்க இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுமாகயிருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தேவையா இல்லையா என்பது ஒரு முக்கியமான கேள்வி இன்றைக்கு பெரிய இரண்டு கட்சிகள் மத்தியில் சமீபகாலத்தின் கணிசமான போட்டி நிலவி வந்திருக்கிறது.

எதிர்காலத்தில் அது எனவிதமாக போகும் என்பது சொல்ல முடியாது. ஆனால் ஏதுமொரு கட்சி மிகவும் கூடுதலான பெரும்பான்மை பெறுவது என்பது சந்தேகத்துக்கிடமானது என்பது பலருடைய கருத்து. ஆளும் கட்சியாக இருகின்ற பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களை பெறறால் கூட அவர்களுக்கு ஒரு முழுமையான அறுதி பெரும்பான்மையோ அல்லது அறுதிப் பெரும் பான்மையோ பெறுவது கடினமாக இருக்கும். அதுஒரு சாதாரண பெரும்பான்மை இருக்கும் என்பது
பொதுவான கருத்து. அவ்விதமான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் ஒரு கட்சியினது உறுப்பினர்கள் ஏற்பட இருக்கின்ற ஆட்சி ஒழுங்குகளில் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பை செய்யகூடிய ஒரு வாய்ப்பு உருவாகலாம்.

அவ்விதமான பங்களிப்பு ஒன்று உருவாகுவதாக இருந்தால் அந்த பங்களிப்பை அர்த்தமுள்ளதக்குவதற்கு எங்களுடைய உறுப்புரிமையை நாம் எந்தளவுக்கு அதிகரிக்கின்றோமோ அந்தளவுக்கு அது உதவியாக இருக்கும் …. இந்த அடிப்படையில்
தான் இதை பரிசீளிக்கின்றோம் . பரிசீலித்து ஒரு நியாயமான முடிவுக்கு வரவேண்டும். அதே நேரம் இன்றைக்கு மேல் மாகாணத்தில் ஒரு தமிழ் மகன் மலையகத்தை சேர்த்த தமிழ் மகன் பாராளுமன்ற உறுபினராக இருக்கின்றார் . அவரின் உருப்புருமைய பெறுவதற்கு நாங்கள் பாதகமாக இருக்க கூடாது.

சில சமயம் நங்கள் பாதகமாக செயற்பாடுகின்ற பொது அது எமக்கும் பாதகமாக முடியலாம் அவருக்கும் பாதகமாக முடியலாம். அந்த நிலைமை வரக்கூடாது . ஆகவே அதையும் பரிசீலித்து அவர்களுடன் பேசி இந்த சம்பவம் சம்பந்தமாக ஒரு முடிவெடுக்க வேண்டும். இந்த விடயம் நீண்டகாலமாக பேசப்பட்ட ஒரு விடயம் ஆகவே இது தொடர்பில் இண்டைக்கு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஏனெண்டால் பாராளுமன்றம் வருகின்ற மாத முடிவில் கலைக்கப்பட இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் சித்திரை மாதத்தில் வருவதனால் இதை தாமதம் இல்லாமல் நாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த விடயம் சம்பந்தமாக சம்மந்தப்படும்; தரப்பினருடனும் பேச்சு நடத்திய பின்னர், விரைவில் கூடி இறுதித் தீர்மானம் எடுப்பது என்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment