யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையும் கண்காட்சியும்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையும் கண்காட்சியும் இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக இந்த ஆண்டு நடைபெறுகிறது.இன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் உள்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரமப்பித்து வைத்துள்ளனர்.

விற்பனை கண்காட்சி கூடங்கள், மாலை நேர இசை நிகழ்வுகள், மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வுகள் , சிறுவர்களுக்கான விளையாட்டுகள் , பொழுது போக்கு பூங்கா, விசேட உணவுகள் அடங்கிய உணவுக் கூடங்கள் என சுமார் 100க்கும் அதிகமான கூடாரங்கள் அமைக்கப்பட் டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment