இணுவில் கந்தசுவாமி கோவிலின் கார்ப்பெட் வீதி திறந்துவைப்பு!! (படங்கள்)

இணுவில் கந்தசுவாமி கோவிலின் கார்ப்பெட் வீதி த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப்பெரு மஞ்சமானது தைப்பூச திருநாளாகிய இன்று (08.02.2020) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கார்ப்பெட் வீதியில் வலம் வருகிறது.

பக்த கோடிகளின் கோரிக்கைக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது முயற்சியினால் முன்னாள் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூபா இரண்டு கோடி எண்பது லட்சத்தில் இவ்வீதி புனரமைக்கப்பட்டது. இவ்வீதியானது இன்று கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

Comments (0)
Add Comment