வவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.!! (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் நாகாராஜா வித்தியாலத்தில் கல்வி பயிலும் 18 மாணவர்களிற்கு சுவிஸ் தமிழ் கல்விச் சேவையின் உதவியுடன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.

குறித்த உதவிதிட்டத்திற்கான ஒழுங்கமைப்பு வவுனியா நகரசபையின் உறுப்பினரும் பாடசாலையின் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஏற்பாடு செய்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் இ.தமிழழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலய விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் இ.மாதவன் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தார்.
அத்துடன் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ் கல்விசேவையின் இணைப்பாளர் புஸ்பலதா, பிரதி அதிபர் ம.ஜெயபிரகாஷ், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment