மக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

மக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ் தோழர்களால்” கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்)

“மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி”யும், “புளொட்” செயலதிபருமான அமரர். தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரின் நினைவாக, அவரின் பாசறையில் வளர்ந்த தோழர்களினால் தாயக மாணவர்களுக்கு “கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு” வவுனியா சாந்தசோலை முனீஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (18.02.2020) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வவுனியா நகரசபை தலைவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், புளொட் அமைப்பின் உபதலைவர்களில் ஒருவரும், எதிர்வரும் பாராளுமன்ற வன்னி மாவட்ட வெற்றி தேர்தல் வேட்பாளருமான கௌரவ தோழர் ஜி.டீ.லிங்கநாதன் அவர்களும், முன்னாள் வவுனியா நகரசபை உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், தற்போதைய வவுனியா நகரசபை உறுப்பினருமான கௌரவ தோழர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களும், கிராம முக்கியஸ்தரும், சமூக சேவையாளருமான திருமதி பவானி அக்கா அவர்களும், ஆலய அரங்காவல் சபையினரும், மாணவர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

தொடக்க நிகழ்வாக மறைந்த செயலதிபர் தோழர்.உமா மகேஸ்வரன் அவர்கள் ஆத்ம சாந்திக்கான இருநிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து தோழர் லிங்கநாதன் அவர்கள் “எதிர்கால மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மாணவர்களுக்கு இலகுவாக புரியும்படி” உரையாற்றினார்.

தொடர்ந்து தோழர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் தனதுரையில் “கல்வி மட்டுமல்ல நல்ல விளையாட்டுகளிலும், கலைகளிலும் மாணவர்கள் கரிசணை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து சமூக சேவையாளர் திருமதி பவானி அக்கா “கிராமத்தில் தற்சமயம் சில வேண்டாத சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மாணவர்கள் இளைஞர்கள் மிக அவதானமாக இருக்க வேணுமெனவும்” கேட்டுக் கொண்டார்.

முடிவாக கலந்து கொண்ட தோழர்களினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பவானி அக்காவின் நன்றி கூறலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

மேற்படி நிகழ்வுக்கான, நிதிப் பங்களிப்பை “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்கள் ஆனந்தன் (சூரிச்), வரதன் (சூரிச்), தேவண்ணர் (கிளரொஸ்), பாபு (சூரிச்), பிரபா (சூரிச்), செல்வபாலன் (சொலத்தூண்), ரமணன் (செங்காலன்), அசோக் (செங்காலன்), சித்தா (செங்காலன்), குழந்தை (பேர்ண்), ரஞ்சன் (ஒபேர்புர்க்) ஆகியோர் வழங்கி இருந்தனர். மேற்படி “புளொட்” சுவிஸ்கிளைத் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், நாளையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்… திரு.மாணிக்கம்ஜெகன் வவுனியா.

“புளொட்” செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உமா மகேஸ்வரன் பவுண்டேஷனால்” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்)

“புளொட்” உமாமகேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு “தாகசாந்தி” நிலையம்!! (படங்கள்)

Comments (0)
Add Comment