சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது – உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் மூலம் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, பதவி ஏற்று 3 மாதங்கள் ஆன நிலையில் முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவும் உடனிருந்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

”பிரதமர் மோடியுடன் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். சிஏஏ-வால் யாரும் பயப்பட வேண்டாம். குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதில்லை. மாறாக அண்டை நாடுகளில் வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார்.

Comments (0)
Add Comment