3 நிமிடத்தில் 30 தோப்புக்கரணம் – பிளாட்பார டிக்கெட் இலவசம்..!!

தலைநகர் டெல்லியில் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்பாரம் டிக்கெட் இலவசமாக தரும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. அங்குள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில்தான் இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரம் இருக்கிறது.

அந்த இயந்திரத்தின் முன்பு 30 தோப்புக்கரணம் போட்டால் போதும், உடனே அந்த இயந்திரம் பிளாட்பார டிக்கெட்டை வழங்குகிறது.

இந்த இயந்திரம் குறித்த வீடியோவை ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஒரு சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுவது கூட ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவக்கூடும். எனவே அது குறித்த விழிப்புணர்வுக்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment