இறந்த மகளால் உயிர்பெற்ற சிறுவனை கட்டியணைத்து கண்ணீர் வடித்த பெற்றோர்..!!

தங்களுடைய இறந்த மகளின் சிறுநீரக தானத்தால் உயிர் பிழைத்த சிறுவனை, சிறுமியின் பெற்றோர் கட்டியணைத்து கண்ணீர் வடித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஐக்கிய அமீரகத்தில் நடந்தேறியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த அருண் – கீர்த்தி தம்பதியினர் தங்களுடைய மகள் தேவி ஸ்ரீயின் 6வது பிறந்தநாளை கடந்த ஆண்டு கொண்டாடியுள்ளனர்.

அப்போது திடீரென சிறுமி சுவாசிக்க சிரமப்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் காரணமாக சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரும் சோகத்தில் மூழ்கிய அவருடைய பெற்றோர், சிறுமியின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் மூன்று பேரின் உடலில் அவருடைய ஆன்மாவை காணலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அவருடைய ஒரு சிறுநீரகம், தீபக் ஜான் ஜேக்கப் மற்றும் திவ்யா எஸ் ஆபிரகாம் என்கிற தம்பதியினரின் 7 வயது மகனான ஆடமிற்கு தானம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக டயாலிசிஸில் இருந்த ஆடம், பொருத்தமான சிறுநீரக நன்கொடையாளரைப் பெற காத்திருந்தார்

இதற்கிடையில் தேவி ஸ்ரீயின் சிறுநீரகம், சிறுவனுக்கு பொருந்துவதை கவனித்த மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். அதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக தானம் செய்ய சம்மதித்தனர்.இதனையடுத்து நான்கு மணி நேர மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், சிறுநீரகம் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் முழுவதும் குணமடைந்த ஆடம், புதன்கிழமையன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளான். அவனை பார்ப்பதற்காக அறைக்கு வெளியே காத்திருந்த தேவி ஸ்ரீயின் பெற்றோர், வேகமாக ஓடிச்சென்று சிறுவனுக்கு முன்பாக மண்டியிட்டு, அவனைத் தழுவி கண்ணீர் வடித்துள்ளனர்.

அவர்கள் தேவி ஸ்ரீயின் பெற்றோர் என்பதை அறிந்துகொண்ட ஆடமும், அவர்களை கட்டியணைத்துள்ளான்.

அதேபோல தேவி ஸ்ரீயின், இரண்டாவது சிறுநீரகம் அபுதாபியில் உள்ள 15 வயது சிறுவனுக்கும், அவரது கல்லீரலுக்கும் சவுதி அரேபியாவில் வசிக்கும் வயது வந்தவருக்கு வழங்கப்பட்டது

Comments (0)
Add Comment