10 வயது காதலனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமி: திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!!

10 வயது சிறுவனால் கர்ப்பமுற்றதாக கூறிய ரஷ்ய சிறுமி திடீரென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய பள்ளி மாணவியான Darya (13), தனது காதலனாகிய Ivan (10) என்னும் சிறுவனால் கர்ப்பமானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினாள்.

ஆனால், இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், Ivan இன்னமும் சிறுவன்தான், அவனது உடல் தந்தையாகும் அளவுக்கு முதிர்ச்சி பெறவில்லை என்று கூறிவிட்டனர்.

பின்னர், தான் ஒரு 15 வயது சிறுவனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்ட Darya, அதை மறைக்கத்தான் Ivan தனது குழந்தையின் தந்தை என்று கூறியதாக தெரிவித்தாள்

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் Darya, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளாள்.

அதில், நான் கொஞ்சம் நாளைக்கு ஒன்லைனில் வரமாட்டேன், எனக்கு எதிர்பாராமல் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.ஆகவே நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் Darya.

இதற்கிடையில், Daryaவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவனை பொலிசார் வீட்டுக்காவலில் வைத்து, விசாரித்துவருகின்றனர்

Comments (0)
Add Comment