பிரித்தானியா பெண்ணை கொன்ற கொலைகாரனுக்கு தண்டனை அறிவிப்பு! நீதிமன்றத்தில் கலங்கிய தாய்..!!

நியூசிலாந்தில் பிரித்தானியா சுற்றுலா பயணியை கொன்ற கொலைகாரனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்திற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரை சேர்ந்த 22 வயதான கிரேஸ் மில்லன், ஆக்லாந்தில் டின்டர் ஆப் மூலம் பழகிய நபரால் படுகொலை செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று கொலைகாரனுக்கு பரோல் அல்லாத 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கியது. சட்ட காரணங்களுக்காக 28 வயதான கொலைகாரனின் பெயர் வெளியிடப்படவில்லை.

நீ ஒரு அந்நியன், அவள் உன்னை நம்பினாள். நீங்கள் பெரிய மற்றும் சக்திவாய்ந்த மனிதர், அவள் பலம் குறைவானவள். உடல் பலத்தில் நீங்கள் மில்லனை விட ஆதிக்கம் கொண்டிருந்தீர்கள் என நீதிபதி சைமன் மூர் கொலையாளியிடம் கூறினார்.

கிரேஸின் கொலையால் மீளா துயரத்தில் இருக்கும் அவரது அம்மா கில்லியன், கொலையாளியிடம் தனது மகள் பயத்தில் அறையில் தனியாக இறந்தார் என்று கூறினார்

பிரித்தானியாவில் உள்ள வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு வழியாக நீதிமன்றத்தில் ஆஜரான கில்லியன், உணர்ச்சிவசப்பட்ட படி தனது அறிக்கையைப் படித்தார்.

கிரேஸ் என் நண்பர், எனது மிகச் சிறந்த நண்பர். நீங்கள் என் மகளின் எதிர்காலத்தை நாசமாக்கி, எங்கள் பலரின் எதிர்கால கனவுகளை அழித்துவிட்டதால் நான் முற்றிலும் மனம் உடைந்திருக்கிறேன்.

என் மகளுக்கு இனி ஒருபோதும் முத்தமிட முடியாது என்ற எண்ணத்தில் நான் சிந்திய கண்ணீர் ஒருபோதும் நிற்காது. என் கடைசி மூச்சு வரை என் கிரேஸின் பிரிவால் நான் வாடுவேன் என கில்லியன் கூறியுள்ளார்

Comments (0)
Add Comment