படுக்கையில் அசைவற்று கிடந்த 38 வயது கர்ப்பிணி பெண்! அங்கு வந்த நண்பருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

பிரித்தானியாவில் 38 வயது கர்ப்பிணி பெண் படுக்கையில் சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பிலான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேல்ஸை சேர்ந்தவர் Francesca Harris (38). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானார்.

24 வார கர்ப்பிணியாக இருந்த Francesca வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் Francesca நண்பர் Burton அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் கதவை வெகுநேரமாக தட்டியும் Francesca திறக்காததால் பின் பக்க ஜன்னல் வழியாக வீட்டுக்குள் குதித்து Burton உள்ளே வந்தார்

அப்போது படுக்கையில் அசைவற்ற நிலையில் Francesca இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர் உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தார்.

இதையடுத்து அங்கு வந்த மருத்து குழுவினர் Francesca-ஐ பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.

இந்த சம்பவம் கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்த நிலையில் கர்ப்பிணி Francesca மரணத்தில் பலருக்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அந்த மர்மம் தற்போது தான் விலகியுள்ளது. இது தொடர்பில் மருத்துவர் சவுண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் தான் Francesca உயிரிழந்துள்ளார்.

அவர் இரத்தத்தில் இறப்பதற்கு முன்னர் சிறியளவில் போதை மருந்துகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதனால் அவர் உயிர் பிரியவில்லை, ஆரோக்கியமாக இருந்த போதிலும் மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்த கசிவே மரணத்துக்கு காரணம், இது இயற்கையான மரணம் தான் என கூறியுள்ளார்

Comments (0)
Add Comment