மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ஸ்மிரிதி இரானியுடன் அமித்ஷா ஆலோசனை..!!

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருடன் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி

இதற்கிடையே 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு உள்துறை மந்திரி ஷேக் இம்ரான் அப்துல்லா நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாக அமித்ஷா பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Comments (0)
Add Comment