டிரம்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் தாஜ்மகால் வரை வாசகங்கள்..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.

வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையில் தாஜ்மகாலை பார்க்க உள்ளதால், ஆக்ரா நகரம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் வரை 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலையின் இரண்டு பக்கமும் சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டு. டிரம்பை வரவேற்கும் விதமாக வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

Comments (0)
Add Comment