கிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கிளிநொச்சியிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 90 வீதத்திற்கு அதிகமான அதிபர் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கிளி்நொச்சி மாவட்ட ஆசிரியர சேவை சங்க செயலாளர் கிருபாகரன் தெரிவித்தார். குறித்த சுகவீன விடுப்பு போராட்டம் காரணமாக பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செய்ற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளிற்கு ஆசிரியர்கள் வருகை தராமையால் மாணவர்களும் வருகை தரவில்லை. இதன் காரணமாக பாடசாலை முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இதேவேளை கிளிநாச்சி மாவட்ட ஆசிரிய சேவைச் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் அதிபர் ஆசிரிய சுகவீனவிடுப்பு போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவைச் சங்கத்தினர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை இன்று நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றோம். எமது கோரிக்கைக்கு அமைச்சர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். எமக்கு தீர்வு கிடைக்கும்வகையில் அமைச்சர் தனது முயற்சிகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பெற்றோரிடமிருந்து அதிக ணத்தினை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட ஆசிரயர்கள், அதிபர்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் அடங்கிய 5 அம்ச குாரிக்கைகள் இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment