கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு!!

கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தற்பொழுது தென்கொரியாவில் பரவிவருகின்றது. இருப்பினும் அங்குள்ள இலங்கையர் எவரும் வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது.

அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இலங்கையர் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் 24 மணித்தியாலமும் செயற்படும் தூதரகத்தின் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொள்வதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

0082 – 27352966 / 0082 – 27352967 / 0082 – 27942668 அந்த தொலைபேசி இலக்கங்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தொடர்புகொள்வதன் மூலம் இலங்கையர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தூதரகத்துக்கு அறிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment