நண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!!

பத்தேகம, கிங் கங்கை முல்கடபல பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (26) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சென்று வந்ததன் பின்னர் முல்கடபல பாலத்திற்கு அருகில் நீராட சென்றுள்ளனர். இதன்போது, மாணவர்கள் நீராடிய போது அதில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பத்தேகம ஹம்மெலிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவராகும்.

உயிரிழந்த மாணவரின் சடலம் தற்போது பத்தேகம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment