எல்லை தாண்டி மீன்பிடித்தாக 5 இலங்கை மீனவர்கள் படகுடன் கைது!!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக 5 இலங்கை மீனவர்கள் படகுடன் கைது:இந்திய கடற்படை நடவடிக்கை

இன்று அதிகாலை மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஐந்து மீனவர்கள் தனுஸ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த போது சர்வதேச கடல். எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் எல்லை தாண்டி மீன் பிடித்தாக மீனவர்களை படகுடன் கைது செய்து ராமேஸ்வரம் மெரைன் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் ஐந்து மீதும் வழக்கு பதிவு செய்த மெரைன் போலிஸார் மீனவர்களுடம் விசாரணை நடத்த வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

Comments (0)
Add Comment