அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக கைதிகள் சிறை வாயிலை உடைத்து வெளியேற முயற்சித்த வேளை கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் 2 பேரை அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் இன்று சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் சிறையில் உள்ள சுமார் 350 கைதிகள் தம்மை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளுடன் சிறை வைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையை உடைத்து சிறைச்சாலை உள் வளாகப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து சிறையின் முன் வாயிலை உடைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் அங்கு சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். கைதிகளை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!!

தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!!

முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!

வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!

தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

Comments (0)
Add Comment