கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

கொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகைதந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

கந்தகாடு தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும், புனானை தடுப்பு முகாமில் இருந்து 203 பேரும் இவ்வாறு வெளியேறியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு இராணுவத்தினரின் தலையீட்டில் விசேட பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான மதிய உணவு உள்ளிட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

Comments (0)
Add Comment