பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் கொரேனா தொற்றுத் தொடர்பாக எமது சபையினைத் தொடர்புபடுத்தி வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கிறிஸ்துவின் பணியில் எனக் குறிப்பிட்டு பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம் அளித்துள்ளதுள்ளது

குறித்த சபையின் தேவாலய முகப்புத்தகம் முடக்கப்பட்ட நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட அச் சபையின் முகப்புத்தகத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தச் சபையில் தலைமைக்காலய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

கொரோனா தெற்றுத் தொடர்பானது…

1. 1. எமது சபையின் தலைமைப் போதகர் அவர்கள் சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து இலங்கை நோக்கிப் பயணம் செய்யும் வரையில் கெரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை என்பதோடு குறித்த நோய்க்கான எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை.

2. 2. இலங்கையிலிருந்து மீண்டும் திரும்பிவரும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த நோய்கான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் அளவுப் பரிசோதனையின் பின்னரே அவர் தொடர்ந்து பிரயாணப்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3. 3. யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியிலுள்ள பயத்தைப் போக்கும் வகையிலும் தொற்றுநோயினைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கையிலுள்ள எமது திருச்சபை சகல ரீதியிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகின்றோம்.

மேலும் பொதுநலன் கருத்தி எமது சபையினால் நடாத்தப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் தம்மை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது திருச்சபையின் முகப்புத்தகத்திலுள்ள படங்களை எடுத்து தவறான வகையில் செய்திகளை வெளியிடுவோர் தயவுசெய்து உண்மையினை அறிந்து செய்திகளை வெளியிடுங்கள்.

குறிப்பாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் எமது திருச்சபை வாலிபர்களின் புகைப்படங்களை எடுத்து யாழ்ப்பாணத்தில் இவர்கள் வசிக்கின்றார்கள் என்று தவறான செய்திகள் பரப்புகின்றனர். இவைகளை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த பிரத்தியேக தகவலின்படி, மேற்படி போதகர் திரு.பவுல் (போல்) சற்குணராஜா இலங்கை வரும்போது இந்த “கொரோனாஸ்” வருத்தம் இருந்ததாக உறுதியான தகவல் கிடைத்து உள்ளது. அத்துடன் இதுகுறித்து “உரிய நடவடிக்கை” எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

இலங்கையில் 3ஆவது கொரோனா நோயாளி குணமடைந்தார்!!

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 208 பேர் வீடு திரும்பினர்!!!

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

Comments (0)
Add Comment