டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

கொரோனா காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின். கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க மொத்தம் 158 நாடுகளை கொரோனா பாதித்து இருக்கிறது. சீனா, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை கொரோனா அதிகம் பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 18,957 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கி உள்ளது. 425,959 இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 109,241 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இன்னும் வீட்டில்தான் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்பெயினில் நிலை என்ன கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர். 47,610 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 5623 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று மட்டும் ஸ்பெயினில் 5552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஸ்பெயினில் இன்று மட்டும் 443 பேர் பலியாகி உள்ளனர்.

தொடரும் பலி எண்ணிக்கை ஸ்பெயினில் ஒரே நாளில் இத்தனை பேர் பலியாவது இது இரண்டாவது முறை. நேற்று அங்கு மொத்தம் 514 பேர் பலியானார்கள். தற்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஸ்பெயின் இதனால் இன்றைய நாளை டெட்லி டே என்று குறிப்பிட்டுள்ளது. அங்கு இன்றைய தினம் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. மொத்தமாக பலியானார்கள் எண்ணிக்கை மொத்தமாக பலியானார்கள் எண்ணிக்கை இதன் மூலம் கொரோனாவால் பலியானார்கள் எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் முந்தி இருக்கிறது. சீனாவில் இன்று 47 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. சீனாவில் இதுவரை 81,218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 3,281 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியை விட தற்போது ஸ்பெயினில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இரண்டாம் இடம் பிடித்தது இத்தாலியில் 69,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6820 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியின் வேகத்தை விட தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. ஸ்பெயின் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரே வாரத்தில் இத்தாலியை முந்திவிடும் என்று கூறுகிறார்கள். அங்கு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அந்நாட்டு அரசு குழம்பி இருக்கிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

Comments (0)
Add Comment