1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

சீனாவில் தற்போது கொரோனா காரணமாக வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் உள்ள எல்லோரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். கொரோனா வைரஸ்.. உலகமே அமைதியாக இருந்த ஒரு நாளில் டிசம்பர் 1ம் தேதி முதல் நபர் கொரோனா வைரஸோடு சீனாவில் வுஹனில் அனுமதி ஆனார். அதன்பின் சீனாவின் வுஹன் நகரத்தில் மட்டும் வரிசையாக 37 பேர் கொரோனா வைரஸ் தாக்கி அனுமதி ஆனார்கள். வுஹன் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் ஒன்றில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்போது தொடங்கிய இந்த வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுக்க மொத்தம் 938,370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பலி எண்ணிக்கை இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 47,286 பேர் பலியாகி உள்ளனர். 195,387 பேர் இதில் இருந்து இதுவரை விடுபட்டு உள்ளனர். அதிகமாக அமெரிக்காவில் 215,344 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5112 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13155 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 104,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9387 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க பல நாடுகளில் இதே தீவிரத்துடன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் நிலை ஆனால் உலகில் முதல் முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் தற்போது நிலை இவ்வளவு மோசமாக இல்லை. சீனாவில் மொத்தமாக கொரோனா காரணமாக இதுவரை 81,589 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு தற்போது 76,408 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1863 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் அங்கு 3,318 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக கட்டுப்படுத்திவிட்டது மொத்தமாக கட்டுப்படுத்திவிட்டது சீனாவில் தற்போது கொரோனா முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அங்கு தினமும் 15-30 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்படுகிறது. அதிலும் 30 பேர் வரை வெளிநாட்டு பயணிகள். புதிதாக உள்நாட்டு மக்களுக்கு அங்கு கொரோனா இல்லை. அதேபோல் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் 700 பேருக்கும் குறைவாகவே மொத்தமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. எப்படி கட்டுப்படுத்தியது எப்படி கட்டுப்படுத்தியது இதுதான் தற்போது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

சீனா எப்படி இவ்வளவு வேகமாக நோயாளிகளை குணப்படுத்தியது. ஒரு நோயாளியை தற்போது இருக்கும் சாதாரண மருத்துவ முறைகளில் குணப்படுத்த குறைந்தது 21 நாட்கள் ஆகும். அதிலும் தீவிரமாக நோயாளிகளை குணப்படுத்த 30 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் 76,408 நோயாளிகளை 50 நாட்களில் (பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து) சீனா குணப்படுத்தி உள்ளது. மருந்தை வைத்துக் கொண்டு மறைக்கிறதா? மருந்தை வைத்துக் கொண்டு மறைக்கிறதா? கொரோனாவிற்கு சரியான மருந்து இல்லை.

ஆனாலும் இந்த சாதனையை சீனா செய்துள்ளது. இதுதான் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மருந்தே இல்லாமல் சீனா எப்படி இத்தனை நோயாளிகளை குணப்படுத்தியது. அதிலும் இவ்வளவு வேகமாக குணப்படுத்தி உள்ளது என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவும் போது, தங்கள் நாட்டிற்குள் இந்த வைரசை எப்படி சீனா பிற மாகாணங்களுக்கு பரவ விடாமல் தடுத்தது என்று கேள்வி எழுந்துள்ளது. வேறு சில பெரிய நாடுகளே திணறுகிறது வேறு சில பெரிய நாடுகளே திணறுகிறது உலகில் மிக சிறப்பான மருத்துவ வசதி கொண்ட நாடுகள்தான் இத்தாலி மற்றும் ஸ்பெயின்.

ஆனால் அங்கும் கூட கொரோனாவிற்கு எதிரான போராட்டங்கள் மிக கடினமானதாக இருக்கிறது. உலகம் முழுக்க செல்லும் கியூபா மருத்துவர்களே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் சீனாவின் மருத்துவத்துறை என்பது கடந்த 10 வருடத்தில் வளர்ந்த ஒன்று. அப்படி இருக்கும் போது, சீனா எப்படி கொரோனாவை கட்டுப்படுத்தியது என்று கேள்வி எழுந்துள்ளது. வேறு சிகிச்சை முறை உள்ளதா? வேறு சிகிச்சை முறை உள்ளதா? கொரோனா தொடர்பாகவும் அதில் இருந்து சீனா தப்பித்தது தொடர்பாகவும் இரண்டு முக்கியமான கேள்விகள் உலகம் முழுக்க சீனாவிற்கு எதிராக எழுந்துள்ளது. 1. கொரோனாவிற்கு மருந்து இல்லாமல் இத்தனை நோயாளிகளை, இவ்வளவு வேகமாக சீனா எப்படி குணப்படுத்தியது. மருந்துகளை வைத்துக்கொண்டு சீனா மறைக்கிறதா? 2. உலகின் மூலை முடுக்கெல்லாம், ஏன் அமேசான் காட்டிற்கு கூட பரவிய கொரோனா வைரஸை எப்படி சீனா தன் நாட்டில் உள்ள பிற மாகாணங்களுக்கு பெரிய அளவில் பரவ விடாமல் தடுத்தது என்று கேள்வி எழுந்துள்ளது.








கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

Comments (0)
Add Comment