அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையின் மத்தியில் பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்கர்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டாலும், அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நலனை முன்னிறுத்தி சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே செயற்படுகிறது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடலை இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு அமைவாகப் புதைப்பதற்கு காணப்பட்ட வாய்ப்புக்கள் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயத்தில் நாம் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லையென்பதால், வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தும் வேளையிலும் நாம் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே செயற்பட்டோம். தற்போதைய நெருக்கடி நிலை அனைத்து மதத்தவர்களையும் பாதித்திருக்கிறது.

எனினும் முழுநாட்டு மக்களின் நலனிலும் எத்தகைய தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று சிந்தித்து, அதற்கேற்றவாறு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க,

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 3 மாதகாலங்களே ஆகியிருப்பதாகவும், இன்னும் இந்த வைரஸ் தொடர்பாக முழுமையாக விபரங்கள் கண்டறியப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி இந்த வைரஸ் பரவக்கூடிய பல்வேறு முறைகள் இன்னமும் கண்டறியப்படுவதாகவும், எனவே அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப்பிரிவினர் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இறந்த நபரின் உடலை புதைப்பதில் நாம் ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். ஆனாலும் இதுவிடயத்தில் அனைத்து மக்களின் நலனையே முன்னிறுத்த வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் இக்கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

Comments (0)
Add Comment