யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்.

நீங்கள் உண்மையான தகவல்களை வழங்கும் போது உங்களையும் உங்களை சுற்றி இருப்போரையும் காப்பாற்ற இலகுவாக இருக்கும். தயவு செய்து உண்மைகளை மறைக்காதீர்கள். என பொலிஸ் சட்ட பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் விஷேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேசரிக்கு தகவல் வழங்கும் போதே அவர் பொது மக்களிடம் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,

‘ உண்மையில் இலங்கையில் சுகாதாரத் துறையும் பாதுகாப்புத் துறையும் கொரோனா வைரஸ் தொற்றை முறியடிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மிக மெச்சத்தக்கது.

எமது நாட்டில் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய உளவுத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஊடாக நாம் தொற்றுக்குள்ளான ஒருவரின் தொடர்பாடல் வலையமைப்பை கண்டறிந்து தேவையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது.

அதனாலேயே தற்போது கண்டறியபப்டும் தொற்றாளர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் இடங்களில் இருந்து கண்டறியப்படுகின்றனர். இந் நிலைமை கொரோனா தொற்றின் சமூக பரவலாக்கத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்தும்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்து உளவுத் துறை சேகரித்துள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்யும் போது, அந்த அனைத்து தொற்றாளர்களும் நேரடியாக, மறைமுகமாக ஒரு வலையமைப்பின் கீழ் தொடர்புபட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது மக்கள் தொடர்ந்து ஒத்துழைத்தால், எமக்கு அதில் வெற்றி கிடைக்கும்.

தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து பொது மக்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக மேல் மாகாணத்தில் வசிப்போர், கண்டி, புத்தளம், யாழ். மாவட்டத்தில் வசிப்போர் யாருடன் பழகினீர்கள் என்பதை நினைவுபடுத்தி பாருங்கள்.

உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் சுகாதார அதிகாரிகள், வைத்தியர்களிடம் பொய்யான தகவல்களை கூறாதீர்கள். உண்மையைக் கூறுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று உங்கள் துர் நடத்தையால் ஏற்படும் தொற்று அல்ல. அத்தொற்றுக்கு உள்ளாவது உங்கள் பிழையால் அல்ல. எனவே அது குறித்து உண்மைகளை கூறத் தயங்காதீர்கள்’ என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

Comments (0)
Add Comment