தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

நாளைய பங்குனி திங்களை முன்னிட்டு ஆலயத்தை கழுவும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரே உயிரிழந்தார். வாகனங்களை கழுவ பயன்படும் கொம்பிரேசர் மூலம் ஆலயத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட மின்ஒழுக்கில் ஒருவர் தாக்கப்பட்டார்.

உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்துமகாசபை செயற்பாட்டாளரான செந்தூரன் என்பவரே உயிரிழந்துள்ளார். தங்கம்மா அப்பாக்குட்டியின் பெறாமகன் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment