கொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது..!!!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருவதாக அந்நாட்டு சுகாதார பணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 25-ந் தேதிக்குள் பாகிஸ்தானில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டி விடும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்தது.

மேலும், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்பு குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறது.

Comments (0)
Add Comment