தண்டப் பணம் செலுத்துவதற்கு சலுகை காலம்!!

மோட்டார் வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்களின் ஊடாக செலுத்துவதற்காக சலுகை காலம் ஒன்றை வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியில் பொலிஸாரால் வழங்கப்பட்ட தண்டப்பண பத்திரத்திற்கான தண்ட பணத்தை 14 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் எந்தவித மேலதிக கட்டணங்களும் இன்றி செலுத்த முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழமையான கடமைகளுக்காக தபால் அலுவலகங்கள் மற்றும் உப அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் குறித்த சலுகைக்கலத்தை வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Comments (0)
Add Comment