தலைமறைவான வட மாநில கொரோனா வாலிபர் நிதின் சர்மா.. தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் நிர்வாகம்!! (வீடியோ, படங்கள்)

விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள வடமாநில வாலிபர் நிதின் சர்மாவை, தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 வயதுடைய தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

ஸ்பெஷல் நியூஸ்.. உருவானது மேலடுக்கு சுழற்சி.. இந்த 10 மாவட்டங்களிலும் செம மழை… வானிலை ஆய்வு மையம் ஸ்பெஷல் நியூஸ்.. உருவானது மேலடுக்கு சுழற்சி.. இந்த 10 மாவட்டங்களிலும் செம மழை… வானிலை ஆய்வு மையம்
நாடே லாக்டவுனில் இருக்கிறது.. ஜவுளி உட்பட 13 வகை ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி! நாடே லாக்டவுனில் இருக்கிறது.. ஜவுளி உட்பட 13 வகை ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 26 பேர் கடந்த 7 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அந்த 4 பேரில் 3 நபர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் உதவியுடன், சுகாதாரதுறையினர் கண்டுபிடித்து, மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒரு நபர் மட்டும் டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர். இவர் விடுவிக்கப்பட்டதிலிருந்தே தலைமறைவாக உள்ளார். அவரை விழுப்புரம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனிடையே அவரை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். மேலும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக 04146 223265 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் டெல்லி வாலிபர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க சுகாதாரத்துறையின் அலட்சியமே காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் தனக்கு கொரோனா தொற்று இருக்கும் என்ற தகவலை அந்த வாலிபர் அறிந்துள்ளரா என்பதும் தெரியவில்லை. அவர் விழுப்புரத்தில் தங்கியுள்ளாரா? அல்லது சரக்கு வாகனங்கள் மூலம் தனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றுகொண்டிருக்கிறாரா என்ற விவரமும் தெரியவில்லை.














அமெரிக்காவில் கொரோனாவுக்கு.. கருப்பர் இனத்தவரே அதிகம் பலி.. காரணம் என்ன.. அதிர வைக்கும் தகவல்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் கொரோனா சந்தேகத்தில் யாழிற்கு அனுப்பிவைப்பு!!

விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

வரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.!!!

அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !!

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

Comments (0)
Add Comment