கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்தள்ளி 2-வது இடத்துக்கு நகரும் பிரேசில்- உயிரிழப்பும் அதிகரிப்பு!! (வீடியோ)

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக உள்ள ரஷ்யாவை முந்தி 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது பிரேசில். பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,12,074 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா

கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

உலகம் முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால்தான் இதை உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 5,232,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 335,636 ஐ தொட்டுள்ளது . சீனாவில் தற்போது வரை 82,971 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் 4,634 பேர் பலியாகி உள்ளனர். இந்த கொரோனா வைரஸால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் 16,23,352 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 96,432 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 326,448 பேர் பாதிக்கப்பட்டும் 3,249 பேர் மாண்டும் போயுள்ளனர். தற்போது பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 312,074 பேர் பாதிக்கப்பட்டும் 20,112 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இத்தாலியில் 228,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 32,486 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 280,117 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. 27,940 பேர் பலியாகி உள்ளனர்.

ஜெர்மனியில் 179,160 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 8,316 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 1,81,826 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 28,215 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தில் 2,54,195பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,393 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 131,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,300 பேர் இதனால் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுக்க 1,20,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுக்க கொரோனா காரணமாக 3,605 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராதான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 98 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தமிழகம்தான் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளது.

உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கவும். மருத்துவமனைக்கு தனியாக செல்வதை விட இது சிறப்பு. இதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலவச உதவி எண் : +91-11-23978046 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நான்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு !! (வீடியோ, படங்கள்)

தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது !!

முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்)

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மதுபான நுகர்விலும், புகைத்தலிலும் கணிசமான வீழ்ச்சி!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது!!

பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா!!

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் இருந்து வவுனியா வந்த 11 பேருக்கு சுய தனிமைப்படுத்தல்!!

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!

யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

Comments (0)
Add Comment