வவுனியா மாங்குளத்தில் பலத்த காற்று : வாகன திருத்துமிடம் சேதம்!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக வாகன திருத்துமிடம் சேதமடைந்துள்ளது.

வீசிய பலத்த காற்றின் காரணமாக மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த வாகன திருத்துமிடத்திற்கு அருகேயிருந்த தென்னைமரம் சரிந்து வாகன திருத்துமிடத்திற்கு மேலே விழுந்ததில் வாகன திருத்துமிடம் சேதமடைந்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

Comments (0)
Add Comment