இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த 21 பேரில் கடற்படையை சேர்ந்த 19 பேரும் மற்றும் வௌிநாட்டில் இருந்து வந்த இருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 769 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment