வங்காளதேசத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீ விபத்து – 5 பேர் பலி..!!

வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள குல்ஷான் சந்தை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தரை தளத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு கொரோனா தனி பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏ.சி. வெடித்து தீ பரவியதால் 5 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. மேலும் பலியானவர்கள் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களா? அல்லது வேறு நபர்களா? என்பது பற்றியும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Comments (0)
Add Comment