மருதமுனையில் குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு!! (படங்கள்)

மருதமுனையில் அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இன்று (29.05.2020) கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி கல்முனை நீதிமன்றத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி அலியார் றஸ்மின் அரச காணிக்கான நியாயபூர்வமா ஆதாரங்களை முன்வைத்தார். இன்னிலையில் வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் தனியாருக்கு உரித்தான காணி என்பதற்கான எதுவித நியாயபூர்வமான ஆவணங்களும் இல்லாத நிலையில், இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எல்.என்.றிஸ்வான் இன்று (29.05.2020) உத்தரவிட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு குறித்த காணிகளை சிலர் பலவந்தமாக பிடித்துள்ளமையை கண்டித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் நடத்தியதோடு மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இடம் மகஜர் ஒன்றும் பாடசாலை சமூகத்தினரால் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இன்னிலையில் இந்த அரச காணிகளை மீட்டெடுப்பதற்கு முன்னின்று செயற்பட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எல்.ஜி காமினி சோமதாச, திணைக்களத்தின் மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஐ.எம்.முனாஸ், முன்னாள் அல்-மனார் மத்திய கல்லூரி அதிபர் மர்ஹூம் எம்.எச். காதர் இப்ராஹிம் ஆகியோருக்கும் பக்கபலமாக செயற்பட்ட சட்டத்தரணி அலியார் றஸ்மின் மற்றும் அல்-மனார் பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அல்- மனார் மத்திய கல்லூரியி;ன் பழைய மாணவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.முஹர்ரப் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

Comments (0)
Add Comment