பாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 ஆயிரத்து 039 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 88 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Comments (0)
Add Comment