4 பேரும் கட்டிப் பிடித்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்! (படங்கள்)

அம்மா மகனை கட்டிப்பிடித்து கொள்ள, மகள்கள் இருவரும் தாய், சகோதரனை கட்டிப்பிடித்து கொள்ள என குடும்பமே கட்டிப்பிடித் கொண்டு சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. ஒரே வீட்டில் 4 பேருமே கேஸ் சிலிண்டரை வெடிக்க செய்து உடல்சிதறி உயிரிழந்தது திருச்சியை உறைய வைத்து வருகிறது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நவல்பட்டு பூலாங்குடி காலனியில் வசித்து வந்தவர் விஜயகவுரி.. 58 வயதாகிறது.. விஜயகவுரியின் கணவர் முருகேசன் 10 வருடத்துக்கு முன்பே இறந்துவிட்டார். முருகேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள்.. மூத்த மகள் விஜயலட்சுமி 32 வயது, விஜயவாணி 29 வயது, மகன் விஜயகுமாருக்கு 27 வயதாகிறது.. விஜயகவுரிதான் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலை செய்து வந்தார்.. இருப்பினும், மகள்கள் இருவருக்குமே கல்யாணம் ஆகவில்லை.

படுகாயம்

இந்நிலையில், கடந்த 10 மாதத்திற்கு முன்பு விஜயகுமார் அரியமங்கலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானார்… இதில் படுகாயம் அடைந்த அவர் கடந்த 8 மாசமாகவே கோமாவில் இருந்தார்… சில தினங்களுக்கு முன்புதான் விஜயகுமாரை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.. ஆனாலும் அவர் பூரணமாக குணமாகவில்லை.. படுத்த படுக்கையாகவே வீட்டிற்குள் இருந்தார்.

பரிசோதனை

இந்தநிலையில் நேற்று மாலை 5.30 விஜயகுமாருக்கு திடீரென உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டது.. இதை பார்த்து பதறிய விஜயகவுரி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார்… ஆம்புலன்சும் விஜயகவுரியின் வீட்டிற்கு வந்தது… அதில் இருந்த ஊழியர்கள் விஜயகுமாரை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொல்லிவிட்டனர்.

ஆம்புலன்ஸ்

108 ஆம்புலன்ஸ் திடீரென விஜயகவுரி வீட்டிற்கு முன்வந்து நின்றதும், அந்த பகுதியில் இருந்தவர்கள் பதற்றத்துடன் வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் என்ன ஏதென்று விசாரித்தனர்.. அப்போதுதான், அந்த வீட்டு இளைஞர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக சொல்லி உள்ளனர்.

கோமா

ஆரம்பத்தில் இருந்தே அக்கம், பக்கத்தில் யாரிடமும் விஜயகவுரி குடும்பத்தினர் அவ்வளவாக பேச மாட்டார்களாம்.. தனித்தே வாழ்ந்து வந்துள்ளனர்.. அதனால்தான் மகனுக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதுவரை எதுவுமே தெரியவில்லை.. தங்களிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் அக்குடும்பத்தினர் ஒதுங்கியே இருப்பதால், துக்கம் விசாரிக்கவும் வீட்டிற்குள் செல்லவில்லை.

சிலிண்டர்

இந்தநிலையில் நேற்று இரவு 7.40 மணி அளவில், விஜயகவுரி வீட்டில் இருந்து டமார் என்ற சத்தம் தெருவையே அலற வைத்தது.. அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, விஜயகவுரியின் வீடு தரைமட்டமாகி கிடந்தது.. மேலும் வீட்டினில் 2 மகள்கள், மகன், அம்மா என 4 பேருமே கட்டிப்பிடித்தபடி உடல் கருகி கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

சகோதரிகள்

மகன் இறந்த துக்கத்தில் இருந்த விஜயகவுரி இறந்த மகனை கட்டிப்பிடித்து கொள்ள, அம்மா, தம்பியை 2 அக்காக்களும் கட்டிப்பிடித்து கொள்ள.. என 4 பேருமே ஒருவருக்கொருவர் பின்னி கிடந்தனர்.. இவர்கள் கட்டிப் பிடித்துக்கொண்டே கியாஸ் சிலிண்டரையும் வெடிக்கச்செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தற்கொலை

4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி

ஒரே நேரத்தில் 4 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இல்லாததால், ஆரம்பத்தில் இது எதேச்சையாக நடந்த விபத்து என்றுதான் கணிக்கப்பட்டது.. விசாரணையில்தான் சிலிண்டா் தானாக வெடிக்கவில்லை என்பதும், விஜயகுமாரை படுக்க வைத்து சிகிச்சை தந்திருந்த அந்த ரூமுக்குள் சிலிண்டரை எடுத்து வந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது!!

Comments (0)
Add Comment