குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. திருச்சியில் ஷாக்!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனரை போலீசார் அள்ளி கொண்டு போய் ஜெயிலில் வைத்துவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் ஜானகி ராமன்… சொந்தமாக இவர் ஹாஸ்டல் ஒன்றினை நடத்தி வருகிறார். இதில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பலரும் தங்கி வந்துள்ளனர்.

தற்போது லாக்டவுன் என்பதால், பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஒருசிலரால் போக்குவரத்து வசதி இல்லாததால் ஊருக்கு போகாமல் தவித்துள்ளார்.. அதேசமயம் விடுதியையும் கட்டாயம் மூடியாக வேண்டும் என்பதால், அந்த பெண்களை தன்னுடைய வீட்டிலேயே ஜானகிராமன் தங்க வைத்துள்ளார். இந்நிலையில், அப்பெண்கள் குளிக்கும்போது அதனை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார் ஜானகிராமன்..

இது பிறகுதான் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அதன்பேரில் போலீசாரும் விரைந்து வந்து ஜானகிராமனிடம் விசாரணை நடத்தியதில், அவர் வீடியோ எடுத்ததை ஒப்புக் கொண்டார்.. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்த விடுதியை அவர் நடத்தி வந்திருக்கிறார்.. அந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஹாஸ்டல் கட்டணத்தைவிட ஜானகிராமன் குறைவாகவே கட்டணம் வாங்குவாராம்.. அதனால்தான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பல பெண் பிள்ளைகள் இங்கு வந்து தங்க ஆரம்பித்துள்ளனர்.. ஆனால் லேடீஸ் ஹாஸ்டலை எப்படி ஒரு ஆண் நடத்த முடியும்? அனுமதி யார் தந்தது? என்பன உட்பட விசாரணைகள் ஜானகிராமனிடம் நடந்து வருகின்றன.

Comments (0)
Add Comment