வேற வழியேயில்ல… குடிமகன்களை குஷிப்படுத்த.. ரோபோ பார்டெண்டர்களை பயன்படுத்தத் தொடங்கிய தென் கொரியா!! (படங்கள்)

வாடிக்கையாளர்களை மீண்டும் கவர தென் கொரியாவில் உள்ள பார்கள் ரோபா பார்டெண்டர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் பல பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றனர். வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்களிடம் தற்போது வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. இதனால் பல நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மக்களிடம் மீண்டும் பணப்புழகத்தை அதிகரிக்கவும், அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை ஊக்குவித்து வருகிறது.

ரோபோ பார்டெண்டர்கள்

இந்நிலையில் தென் கொரியா நாட்டில் வாடிக்கையாளர்களை கவர ரோபோ பார்டெண்டர்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி மீண்டும் இரவு நேர கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அவர்கள் நம்புகின்றனர். மனிதர்களை போலவே..

அசத்தும் ரோபோக்கள்..

கோட் சூட்டில் மனிதர்களை போலவே நடமாடும் இந்த ரோபோக்கள், தலைகீழாக தொங்கியபடி, சரக்கை கலக்கி கொடுத்து காக்டெயில் பிரியர்களை அசத்துகின்றன. சில ரோபோக்கள் நொடி பொழுதில், ஐஸ் கட்டிகளை பந்து போல் வெட்டி விஸ்கியில் போட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

அச்சம் இருக்காது

“ரோபோக்கள் பார்டெண்டர்களாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பற்றிய அச்சம் இருக்காது. எனவே தான் இங்கு ரோபோக்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளோம்”, என்கிறார் பார் நிர்வாகி ஒருவர்.

தூக்கிப்பிடிக்கும் மதுப்பிரியர்கள்

புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் வாடிக்கையாளர்களை மீண்டும் கவர முடியும் என தென் கொரிய பார் உரிமையாளர்கள் நம்புகின்றனர். இந்தியாவாக இருந்தாலும் சரி, தென் கொரியாவாக இருந்தாலும் சரி, சரிந்த பொருளாதாரத்தை உடனடியாக தூக்கிப்பிடிப்பவர்கள் மதுப்பிரியர்கள் தான் என்பது இதன்மூலம் நிதர்சனமாகியுள்ளது என நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment