பதுளையில் சோகம் – நீராட சென்ற மூன்று பேர் பலி!!

பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 38, 12 மற்றும்13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

Comments (0)
Add Comment