எத்தியோப்பியா: பாடகர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை – 81 பேர் பலி..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரபல பாடகரான ஹஹலூ ஹண்டிசா கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைச்சம்பவம் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரோமியா என்ற இனக்குழுவை சேர்ந்த பாடகரின் கொலைச்சம்வத்தை அடுத்து அந்த இன மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரோமியா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் இந்த இன மக்கள் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையாக வெடித்தது.

இதையடுத்து, போராட்டங்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேலும், பல கடைகள் போராட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்நிலையில், பாடகர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் தொடர்பான வன்முறை இன்னும் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Comments (0)
Add Comment