கணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா ? (படங்கள்)

சின்னத் திரை ஸ்டார்களில் முக்கியமானவர் நம்ம ஸ்ரீதேவி. பெரிய திரை ஸ்ரீதேவி போல முற்றிலும் ஹீரோயினாக மட்டும் இல்லாமல், வில்லி கதாபாத்திரத்திலும் பட்டையைக் கிளப்புவதில் இந்த சின்னத்திரை ஸ்ரீதேவி சூப்பர்தான். இந்த லாக் டவுன் டைம்ல சினிமா துறையினருக்கு வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதால் நேரம் போகாமலும் ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதாலும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் ஸ்ரீதேவியும் அடிக்கடி வீடியோ போடுகிறார். மேக்கப் டிப்ஸ், உடற்பயிற்சி, சமையல் டிப்ஸ் என விதம் விதமாக கலக்குகிறார். அது மட்டுமா தனது கணவரையும் விடுவதில்லை. அவரையும் வெங்காயம் நறுக்க வைத்து வீடியோ போட்டார்.

திமிர் பிடித்த வில்லி

இப்போது தன்னுடைய தோட்டத்தில் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். அது வைரலாக பரவி வருகிறது. ஸ்ரீதேவி சின்னத்திரை சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் அண்ணியாக நடித்திருப்பார். இந்த சீரியலில் சம்பாவை கொடுமைப்படுத்தும் ஒரு திமிர் பிடித்த அணியாக நடித்திருப்பார்.

ரசிகர்கள் ஜாஸ்தி
இவர் நடிப்பது எதிர்மறையான கேரக்டரா இருந்தாலும் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகையாக மாறிவிட்டார். காரணம் இவருக்கு ரசிகர் கூட்டம் ஜாஸ்தியாக இருப்பதுதான். இவரும் இவருடைய கணவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இப்போ லாக்டோன் டைம்ல இருவரும் வீட்டில் ஒன்றாக இருப்பதால் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளையும் புதிது புதிதாக டிக்டாக் கைகளையும் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

ரொம்பப் பிரியம்

ஸ்ரீதேவி ஒரு விலங்கு பிரியை. ஆம் அவருக்கு விலங்குகள் வளர்ப்பது நான் ரொம்ப பிடிக்குமாம். அவருடைய கணவருக்கு போட்டோகிராபினா ரொம்ப பிடிக்குமாம். இருவரும் சேர்ந்து வீட்டு வீட்டு மாடியில் தோட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். நேரம் கிடைக்கும்போது அந்த தோட்டத்தில் புகுந்து ஏதாவது செய்து வீடியோ போட்டோ போடுகின்றனர்.

கணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி

இப்போது full-time வீட்டிலே இருப்பதால் அந்த தோட்டத்தில் விதவிதமாக போட்டோ எடுத்து வருகிறார்கள். இது வைரலாக வருகிறது. தற்போது ஒரு போட்டோ பால்கனியில் இவர்கள் இருவரும் அமர்ந்து டீ குடிப்பது போல எடுத்து இருக்கிறார்கள். அதுவும் கணவர் அசோக் கீழே அமர்ந்தும் அவரது காலில் ஸ்ரீதேவி அமர்ந்தும் டீ குடிக்கிறார்கள். அதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களை பார்த்து எங்கள் மனைவியும் இதுபோல உட்கார ன்னு சொன்னா எங்க நிலைமை என்ன ஆகும் அப்படின்னு பெருமூச்சு விடுகிறார்கள்.

உடம்பைக் குறைச்சுட்டார்

ஸ்ரீதேவி தற்போது வீட்டிலிருந்து டயட்டை மெயின்டனன்ஸ் பண்ணி யோகாவும் பண்ணுவதால் நல்ல வெயிட்டை குறைத்திருக்கிறார். இதனால் அவரது கணவர் இவரது வேட்டை தாங்க முடிந்திருக்கிறது ஆனால் சிலர் வீட்டில் லாக் டைம்ல டபுள் மடங்கு வெயிட் கூடி இருக்காங்க .அவங்க நிலைமை கஷ்டம்தான் இப்படி போட்டோஸ் போறதுக்கு முன்னாடி அடுத்தவங்க நிலமைய கொஞ்சம் யோசிச்சு போடுங்கம்மா!

Comments (0)
Add Comment