வாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்!!

வாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவனுக்கு மனைவியின் சகோதரர்கள் உறவினர்கள் ஊரவர்கள் முறையான கவனிப்பு கொடுத்துள்ளனர்.அடி உதை தாங்காது ஓடியவர் இரண்டு நாட்கள் கடந்தும் வீட்டுக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒருவர் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.அவர் வட்டியும் வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் திண்டாடி உள்ளார்.ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண நகருக்கு வந்து விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

பின்னர் அறையை பூட்டி விட்டு வெளியேறியுள்ளார்.சிறிது நேரத்தில் அங்கு வந்த கடன் வழங்கிய முதியவர் ஒருவர் மனைவியிடம் வாங்கிய கடனுக்கு கணவன் உன்னை என்னிடம் விற்று விட்டான் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.சகோதரர்கள் உறவினர்களுக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து கணவனைத் தேடிக் கண்டுபிடித்து அவரை முறையாக கவனித்துள்ளனர்.இதனால் அவர் ஊரிலிருந்து ஓடித் தப்பி உள்ளார்.இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment