பிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி கரம் நீட்டிய பிரபல நடிகை! (படங்கள்)

வறுமை காரணமாக கடந்த 15 வருடங்களாக பிச்சை எடுத்து சாலையில் வசித்து வந்திருக்கிறார் இயக்குனர் ஒருவர். பிரபல இந்தி நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே. சமூக சேவகருமான இவர், ஆங்கிரி இந்தியன் காடஸ், கிக், மம், மன்டோ, உட்பட பல படங்கலில் நடித்துள்ளார்.

செக்ஸி துர்கா, ஹராம் ஆகிய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

புனே பிலிம்

இன்ஸ்டிடியூட் இவர், சாலையில் வசித்து வந்த சினிமா இயக்குனர் ஒருவருக்கு உதவி செய்துள்ளார். மும்பையில், சாலையோரங்களில் பலர் வசித்து வருகின்றனர். அப்படி வசித்து வந்தவர்களில் ஒருவர், முன்னா ஹூசைன். இவர் 1982 ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா ஆசையில் மும்பையில் பல பாலிவுட் படங்களுக்கு புரொடக்‌ஷன் அசிஸ்டென்டாக பணியாற்றி இருக்கிறார்.

தயாரித்து இயக்கினார்

அப்போது வாடகை வீட்டில் குடியிருந்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது மொத்த சேமிப்பு தொகையான ரூ.30 லட்சத்தை கொண்டு ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார். 1998 ஆம் ஆண்டு இதை செய்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு தனது குடும்பத்தை இழந்துவிட்டார். இதனால் கடந்த 15 வருடமாக வறுமை காரணமாக பிச்சை எடுத்து, பாந்த்ராவில் உள்ள மெகபூப் ஸ்டூடியோ அருகில் நடைபாதையில் வசித்து வந்திருக்கிறார்.

ராஜஶ்ரீ தேஷ்பாண்டே

இந்நிலையில், கொரோனாவுக்காக சில சமூக தொண்டு நிறுவனங்கள், இதுபோன்று சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உதவி வருகிறது. அப்போது முன்னா ஹூசைன் பற்றி தகவல் தெரிந்ததும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் என்பவர், தனக்குத் தெரிந்த நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டேவிடம் தெரிவித்திருக்கிறார். அவர், முன்னா ஹூசைனை சந்தித்துப் பேசினார். ஆனால், அவருக்கு கேட்கும் திறன் இல்லை. பக்கவாதமும் தாக்கி இருக்கிறது.

மனரீதியாக இதுபற்றி

நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே கூறும்போது, ‘இவருக்கு சிலர் உதவி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, சின்ன சின்ன வேலைகள் செய்து முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மொத்தமாக அவர் இழந்துவிட்டார்’ என்றார். இந்நிலையில் தனது முயற்சியின் மூலம் ஹோம் ஒன்றில் அவரைச் சேர்த்திருக்கிறார், நடிகை ராஜஶ்ரீ தேஷ்பாண்டே.

Comments (0)
Add Comment