“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த “நண்பன்.. அதிர்ச்சி! (படங்கள்)

தலைக்கு மப்பு ஏற.. நண்பர்கள் 2 பேரும் சண்டை போட்டுள்ளனர்.. இதில் ஒருவரை இன்னொருவர் அப்படியே அலேக்காக தூக்கி கீழே போட்டதில் அவர் அப்படியே பேச்சு மூச்சற்று கீழே விழுந்தார். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னைக்கு அருகே பெரியபாளையம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், அந்த நடுங்கும் வீடியோ இப்போதுதான் வேகமாக பரவி வருகிறது.. அந்த இடம் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு மைதானம் போல தெரிகிறது.. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிக்க வந்துள்ளனர்.. அப்போது இருவருக்கு இடையே கடும் சண்டை மூண்டு விட்டது. நன்றாக குடித்துவிட்டு ரோட்டில் சண்டை போட்டுள்ளனர்.

எதற்காக இவர்களுக்குள் சண்டை என தெரியவில்லை.. ஒருத்தருக்கொருத்தர் வலுவாக பிடித்து இழுத்து சண்டையிடுகிறார்கள்.. இதை அங்கிருக்கும் மற்ற குடிமகன்களும் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர, யாரும் வந்து இவர்களின் சண்டையை விலக்கிவிடவில்லை.

ஒருகட்டத்தில் சண்டை போட்டிருந்தவர்களில் ஒருவர், இன்னொருத்தரை அப்படியே தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறார்.. அவர் ஒருபக்கம் சாய்ந்து தரையோடு கவிழ்கிறார்.. அவ்வளவுதான்.. அதற்கு பிறகு அசைவே இல்லை.. அங்கிருந்தவர்கள் அப்போதுதான் அந்த நபரிடம் வந்து இதை பற்றி கேட்கிறார்களே தவிர, கீழே விழுந்தவர் என்ன ஆனார் என்று அருகில் வரவே இல்லை.

கீழே தூக்கி வீசப்பட்ட நபர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் இந்த நாசமா போன குடியால் எத்தனை அக்கப்போரெல்லாம் நடக்கப் போகுதோ.

Comments (0)
Add Comment