நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

சென்னை: நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பால் அசைவம் கூட சாப்பிடாத டீடோட்லர் என்று கூறிய நிலையில் அவரே சிக்கன் ஊட்டிவிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

நடிகை வனிதா தமிழக மக்களுக்கு பெரும் பரிட்சயமானவர். திருமணம், விவாகரத்து, காதல், சர்ச்சை, குடும்பத் தகராறு என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதில் சண்டை சச்சரவு என பெரும் பிரபலமானார்.

அடிக்கடி செய்தியில்

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் டைட்டில் வின்னரானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார் வனிதா.

பீட்டர் பாலுடன் திருமணம்

காரணம் அவரது மூன்றாவது திருமணம்தான். நடிகை வனிதா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனக்கு அறிமுகமான பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டருடன் காதல் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தார் வனிதா.

போலீஸில் புகார்

ஆனால் திருமணம் ஆன மறுநாளே பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது கணவர் ஒரு குடிக்காரர், பொம்பளை பொறுக்கி என்றும் குற்றம்சாட்டினார்.

அசைவம் சாப்பிடமாட்டார்

அவருக்கு பதில் தெரிவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் ஒரு டீடோட்லர். அவர் நான்ஆல்கஹாலிக் ஒய்ன் தான் குடிப்பார். அவர் அசைவம் கூட சாப்பிட மாட்டார். பீட்டர் பாலுடன் பழகியவர்களுக்கு தான் தெரியும் அவர் எவ்வளவு நல்லவர் என்று. அவர் ரொம்பவும் மென்மையானவர் என்றார்.

சிக்கன் ஊட்டிவிட்ட வனிதா

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது யூட்யூப் சேனலில் கேஎப்சி கிரிஸ்பி சிக்கன் செய்து வீடியோ வெளியிட்டார் வனிதா. அதின் இறுதியில் தனது மகளுக்கு ஊட்டிவிட்ட வனிதா, பின்னர் தனது கணவரையும் அழைத்து ஊட்டி விட்டார். இதனை தொடர்ந்து கேமராவில் ஒளிப்பதிவு செய்த பீட்டர் பால் வனிதா ஊட்டி விட்ட சிக்கனை சாப்பிட்டார்.

எல்லாமே பொய்தானா..

அப்போது அவர் சிக்கனை கடித்ததும் சிக்கனுக்கு கூட இவரு கிஸ் கொடுக்கிறார் என கிண்டல் செய்தார் வனிதார். இதனை பார்த்த நெட்டிசன்கள், பீட்டர் பால் ஒரு டீடோட்லர் அவர் அசைவம் கூட சாப்பிட மாட்டார் என்று கூறினீர்கள். இப்போது நீங்களே அவருக்கு ஊட்டி விடுகிறீர்களே.. எல்லாமே பொய்தானா என விளாசியிருக்கின்றனர்.

சிக்கன் வெஜ்டேரியனா?

இன்னும் சில நெட்டிசன்கள் சிக்கன் வெஜ்டேரியனா.. சொல்லவே இல்ல என்று மரண கலாய் கலாய்த்துள்ளனர். சில நெட்டிசன்கள், ஒரே பித்தளாட்டமா இருக்கே.. சாம்பு மவனே.. டீடோட்லருன்னு சொல்லிட்டு லெக் பீஸ உள்ள தள்றீயே என்று பங்கம் செய்துள்ளனர்.
என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

Comments (0)
Add Comment