விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (06) மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில் பாதுகாப்பு கடமைகள் நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்ற போது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன்போது காயமடைந்த 35 அகவையுடைய விமானபடையினர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து முள்ளியவளை பொலிசார் விமானப்படையினன் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளார்கள்.

இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Comments (0)
Add Comment