மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்? – அறிக்கை கையளிப்பு!!

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று கடந்த தினம் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் அறிக்கை இன்று (07) முற்பகல் குழுவின் தலைவர் மின்சார அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோனால் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள நிலையில் நாளை (08) குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments (0)
Add Comment