உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கோப்புகளை மீண்டும் திருப்பி அனுப்பிய சட்டமா அதிபர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய, மேலும் 38 முழுமைப்படுத்தப்படாத விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சம்பவம் தொடர்பில் முழுமைப்படுத்தப்படாத 40 விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment