வன்னிக்கும் மருத்துவ பீடம் தேவை!! ஜீனரத்தின தேரர்!!

வன்னி மாவட்டத்திற்கு மருத்துவ பீடம் ஒன்று அமைக்கவேண்டிய தேவை இருப்பதாக ஜெனசெதபெரமுனவின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளரான ஜீனரத்தின தேரர் தெரிவித்தார்.

வவுனியாதமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றயதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

முன்னாள் இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர்கள் மீது போலியான குற்றசாட்டுக்களை முன்வைத்த மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக பொலிஸ்தலைமையகத்தில் எமது கட்சி சார்பாக முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளோம். அத்துடன் முன்னாள் பிரதி அமைச்சர் வினாகயமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்திற்கு எதிராகவும் முறைப்பாடு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் வன்னி பகுதியில் அதிகமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.குறித்த சோதனைசாவடிகள் மக்கள் அதிகமாக நடமாடும் நகர்பகுதிகளில் அமைக்கப்படாமல் தேவையான இடங்களில் மாத்திரம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

அத்துடன் வவுனியா மாவட்டத்திற்கு மருத்துவ பீடம் ஒன்று தேவையாகவுள்ளது இலங்கையில் 8 பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடம் இயங்கிவருகின்றது. எனவே வன்னிமாவட்ட மாணவர்களின் நலன்கருதி மருத்துவபீடம் ஒன்று இங்கு அமைக்கப்படவேண்டும். இது தொடர்பாக உரிய செயற்பாடுகளை தாம் மேற்கொள்வோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment