இப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. “தாதா” எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்!!

எழிலரசி அக்காவை போலீசார் தேடி வருகிறார்கள்.. இப்பதான் ஜெயிலில் இருந்து வந்தவர், திரும்பவும் ஒரு வழக்கில் சிக்கி விட்டார்.. இந்த பெண் தாதா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இவரை புதுச்சேரி போலீசார் தேடி வருகிறார்கள்… கையில் மாட்டினால் மறுபடியும் அரெஸ்ட்தான்!! யார் இந்த எழிலரசி? இவர் ஒரு பெண் தாதா.. புதுச்சேரி மாநிலம் முன்னாள் சபாநாயகர் விஎம் சிவகுமார் கடந்த 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியே எழிலரசிதான்.. இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டிலும் நடந்து வருகிறது.. இதைதவிர, குண்டர் சட்டத்தில் எழிலரசி கைது செய்யப்பட்டார்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். வந்தவர், திரும்பவும் ஒரு வழக்கில் சிக்கி விட்டார்.. காரைக்காலில் வசித்து வருபவர் வெங்கடேஷ்.. இவர் மதுக்கடை ஓனர் ஆவார்.. சர்ச் வீதியில் மதுபானம் மொத்த விற்பனை செய்து வருகிறார்… இவரிடம் வேலை பார்த்த நாகராஜ் என்பவருக்கும், வெங்கடேசுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது… இதில் நாகராஜ் என்பவருக்கு எழிலரசி தான் சப்போர்ட். அதனால், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெங்கடேசனை பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் என்று தெரிகிறது..

சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு 3 பேர் சென்று, எழிலரசி பணம் வாங்கி வர சொன்னார் என்று கேட்டு வெங்கடேஷை மிரட்டியுள்ளனர்.. ஆனால் வெங்கடேஷ் மறுத்துள்ளதாக தெரிகிறது. உடனே எழிலரசி பேச விரும்புவதாக அவர்கள் சொல்லவும், வெங்கடேஷிடம் செல்போனை தந்துள்ளனர்.. எழிலரசி பேசியும் வெங்கடேஷ் பணம் தர மறுத்துள்ளார்.. அத்துடன், காரைக்கால் எஸ்பி வீரவல்லவனுக்கு விஷயத்தை சொன்னார் இந்த புகாரின் பேரில் எழிலரசியின் ஆட்கள் 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்…

எப்படியும் தன்னையும் கைது செய்ய போலீசார் வந்துவிடுவார்கள் என்று அறிந்த எழிலரசி, வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார்.. இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கொலை, பணம் பறித்தல் உள்ளிட்ட எந்த கேஸையும் மிச்சம் வைக்கவில்லை எழிலரசி.. எல்லா குற்ற வழக்குகளிலும் இவர் மீது கேஸ் உள்ளது.. அதனால் இப்போது சிக்கினார் கண்டிப்பாக மறுபடியும் கைது நடவடிக்கை உறுதி என்பதால், போலீசார் இவரை தேடி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment