யாழ்ப்பாணம், மன்னாரில் 28 பேர் சுயதனிமைப்படுத்தலில்; மேலும் சிலர் தேடப்படுகின்றனர்!!

யாழ்ப்பாணத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் மன்னாரில் 14 பேரும் என வடக்கு மாகாணத்தில் 28 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய ஒருவர் பழகிய குடும்பங்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இரண்டு குடும்பங்களும் கோப்பாய், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு குடும்பமும் என 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பியவர் மீள அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் பழகிய மேலும் சில குடும்பங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment